அதிமுக கூட்டணி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா!

 

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா!

அதிமுக கூட்டணி கும்பகோணம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று வீரியம் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள சுகாதாரத்துறை, முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. நேற்று ஒரேநாளில் தொற்று எண்ணிக்கை 6ஆயிரத்தை தாண்டியது. 6,618 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,33,434 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 2,124 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் 22 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா!

இந்நிலையில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவரும், அதிமுக கூட்டணியின் கும்பகோணம் தொகுதி வேட்பாளருமான ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.