பழனியில் பள்ளிக்குச் சென்ற ஆசிரியைக்கு கொரோனா : பள்ளி மூடல்!

 

பழனியில் பள்ளிக்குச் சென்ற ஆசிரியைக்கு கொரோனா : பள்ளி மூடல்!

பழனி அருகே பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால், பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒரு வகுப்பறைக்கு 30 மாணவர்கள் வீதம், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது.

பழனியில் பள்ளிக்குச் சென்ற ஆசிரியைக்கு கொரோனா : பள்ளி மூடல்!

சேலம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியானதாக இன்று காலை தகவல்கள் வெளியாகின. இதனிடையே சேலம் மற்றும் கோவையில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு சிலருக்கு கொரோனா உறுதியானதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா பரவாத வண்ணம், அந்த பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

பழனியில் பள்ளிக்குச் சென்ற ஆசிரியைக்கு கொரோனா : பள்ளி மூடல்!

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்த அந்த ஆசிரியருக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் அந்த அரசு பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.