வெள்ளை மாளிகையில் முக்கிய அதிகாரிக்கு கொரோனா – அமெரிக்காவில் கொரோனா

வெள்ளை மாளிகையில் முக்கிய அதிகாரிக்கு கொரோனா – அமெரிக்காவில் கொரோனா

உலகளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்காதான். இப்போது நடந்து முடிந்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் கொரோனாவைக் கையாண்ட விதமே, அவருக்குப் பின்னடைவைத் தந்திருக்கிறது என்பது உண்மை.

வெள்ளை மாளிகையில் முக்கிய அதிகாரிக்கு கொரோனா – அமெரிக்காவில் கொரோனா

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவின் மொத்த பாதிப்பு 1 கோடியே 58 ஆயிரத்து 586 பேர். இவர்களில் சிகிச்சையில் குணமடைந்தவர்கள் 63 லட்சத்து 91 ஆயிரத்து 208 பேர். மரணம் அடைந்தவர்கள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 230 பேர்.

அமெரிக்காவில் நேற்று மட்டுமே 1 லட்சத்து 32 ஆயிரத்து 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்துக்கு மேல் புதிய நோயாளிகள் அதிகரிக்கும் ஒரே நாடு அமெரிக்காதான்.

வெள்ளை மாளிகையில் முக்கிய அதிகாரிக்கு கொரோனா – அமெரிக்காவில் கொரோனா

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று இயல்புக்குத் திரும்பினார்கள். தற்போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் மிடோஸ்க்கு கொரோனா தொற்று உருதி செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது… அவரைச் சந்தித்த நபர்களுக்கும் பரவியுள்ளதா என்பது ட்ரேஸ் செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.