3 நாட்களில் தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா!

 

3 நாட்களில் தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா!

தமிழக தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 6 மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்தது. பின்னர் 5 ஆம் கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் ஊரடங்கு அமலில் இருந்தபோதே, அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள 100 சதவீத பணியாளர்கள் தமிழக தலைமை செயலகத்தில் பணிசெய்து வந்தனர்.

3 நாட்களில் தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் கடந்த 3 நாட்களில் தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.6500 பணியாளர்களில் இதுவரை 256 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

3 நாட்களில் தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா!

இதனிடையே தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் 50 சதவீத பணியாளர்களை மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், வாழ்வியல் நோயுள்ளவர்கள் ஆகியோருக்கு அலுவலகத்துக்கு வர விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது .