’கொரோனா: அடுத்த சில மாதங்கள் கடினமாக இருக்கும்’ உலக சுகாதார மையம் எச்சரிக்கை

’கொரோனா: அடுத்த சில மாதங்கள் கடினமாக இருக்கும்’ உலக சுகாதார மையம் எச்சரிக்கை

கொரோனா பரவல் குறித்த முக்கியமான எச்சரிக்கையை உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 24 லட்சத்து  97 ஆயிரத்து 379 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 14 லட்சத்து 29 ஆயிரத்து 838 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 49 ஆயிரத்து 367 பேர்.

’கொரோனா: அடுத்த சில மாதங்கள் கடினமாக இருக்கும்’ உலக சுகாதார மையம் எச்சரிக்கை

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக புதிய நோயாளிகள் மற்றும் கொரொனா மரணங்களின் எண்ணிக்கை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும் அங்கு அதிகரிக்க தொடங்கி விட்டது. அதேபோல ஸ்பெயினிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கி விட்டது. மிக குறைந்த அளவில் கொரோனா இருந்த இலங்கையில் தற்போது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

’கொரோனா: அடுத்த சில மாதங்கள் கடினமாக இருக்கும்’ உலக சுகாதார மையம் எச்சரிக்கை

இந்த நிலையில் உலக சுகாதார மையத்தில் தலைவர் டெட்ரோஸ் அடானெம் பேசுகையில், ”உலக நாடுகள் கொரோவைக் கையாள்வதில் சரியான வழிமுறையைப் பின்பற்ற வில்லை. அடுத்து வரும் மாதங்கள் மிக கடினமாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

 கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 87,46,953 பேரும், இந்தியாவில் 78,14,682 பேரும், பிரேசில் நாட்டில்  53,55,650 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்