2 கோடி எண்ணிக்கையைக் கடந்தது – இந்தியாவில் கோவிட் -19 பரிசோதனைகள்

 

2 கோடி எண்ணிக்கையைக் கடந்தது – இந்தியாவில் கோவிட் -19 பரிசோதனைகள்

இந்த ஆண்டு மார்ச் மாதம் சிறப்பாகத் தொடங்க வில்லை இந்தியாவுக்கு. காரணம் கொரோனா. அதன் அலை இந்தியாவில் மார்ச் மாதம் முதல் வீசத் தொடங்கியது. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர். நினைத்தற்கு எதிராக தினந்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

ஆயினும் கொரோனாவிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் சதவிகிதமும் அதிகரித்து வருகிறது. அதேநேரம் கொரோனா நோய்த் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் சதவிகிதமும் குறைந்து வருகிறது. இது அரசுக்கும் பொதுமக்களுக்கும் நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் செய்திகளாகும். இந்த சாதகமான சூழல் ஏற்பட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையின் பங்கு மகத்தானது.

2 கோடி எண்ணிக்கையைக் கடந்தது – இந்தியாவில் கோவிட் -19 பரிசோதனைகள்

இந்தியா இதுவரை 2,02,02,858 கோவிட்-19 மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளது.  , கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில்  நாடு முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  ஐசிஎம்ஆர், பரிசோதனை உத்திகளை வகுத்து, இந்தியா முழுவதும் சோதனை கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்த அணுகுமுறையை திறம்பட செயல்படுத்தி நாடு முழுவதும் அதிக  பரிசோதனைகளை செய்யவும் மற்றும் மக்களிடையே பரவலான கொவிட் சோதனைகளை செய்யவும்  வழி வகை செய்தது.

இன்றும் மதியம் வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், 3,81,027 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன,  சோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 14,640 ஆக அதிகரித்துள்ளது.  இதனால்  பத்து லட்சம் பேருக்கு சோதனைகளின் எண்ணிக்கை 14640 ஆகும். 24 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் நாட்டின் சராசரி அளவைவிட அதிகமான சோதனைகளை செய்துள்ளன.

2 கோடி எண்ணிக்கையைக் கடந்தது – இந்தியாவில் கோவிட் -19 பரிசோதனைகள்

நாட்டின் பரிசோதனைக் கூடங்களின் கட்டமைப்பு, தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு  தற்போது 1348 ஆய்வகங்களாக உள்ளது; அரசு துறையில் 914 ஆய்வகங்களும், தனியார் துறையில் 434 ஆய்வகங்களும் இயங்கி வருகின்றன.  அவற்றின் விவரம் பின்வருமாறு;

  • ரியல் –டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 686 (அரசு-418 + தனியார்-268)
  • ட்ரூநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 556 (அரசு-465 + தனியார்-91)
  • சிபிநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள் ; 106 (அரசு-31+ தனியார்-75)