2.12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை தகவல்

 

2.12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, நேற்று சுகாதரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2.12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை தகவல்

மேலும், 104 பேர் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 81 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஈரோட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 969 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில், 9 ஆயிரத்து 564 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 8 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 867 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

2.12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை தகவல்