“திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை”

 

“திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை”

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சனி பெயர்ச்சி, சனி பரிகாரம் போன்றவை மிகவும் பிரசித்தி பெற்றவையாக உள்ளது. வரும் 27 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரிசோதனை சான்றிதழில் ‘நெகடிவ்’என இருந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவித்திருந்தது.

“திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை”

கொரோனா பரிசோதனை சான்றை கட்டாயமாக்கியதை எதிர்த்து சிங்காரவேலன் வழக்கு தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மட்டும் போதுமானது என்றும், நாளை முதல் 48 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் 48 மணி நேரத்திற்கு முன்பான நெகட்டிவ் சான்று தேவையில்லை என்றும் உத்தரவிட்டது.