சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் இது தான் – அமைச்சர் விளக்கம்!

 

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் இது தான் – அமைச்சர் விளக்கம்!

சென்னையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் இது தான் – அமைச்சர் விளக்கம்!

சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைகள் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர் என்பதை ஓபிஎஸ், ஈபிஎஸ் கூற வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எதுவுமே செய்யாத அதிமுக, ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் அனைத்தையும் செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் பாதிப்பு அதிகரிப்பது குறித்து பேசினார். சென்னையில் மூன்றாம் அலை கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சென்னையில் தொற்று அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.