சென்னையில் பரிசோதனை மனநிறைவு அளிக்கிறது! – ராமதாஸ் மகிழ்ச்சி

 

சென்னையில் பரிசோதனை மனநிறைவு அளிக்கிறது! – ராமதாஸ் மகிழ்ச்சி

சென்னையில் அதிகரிக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மனநிறைவளிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கும் அமலில் உள்ளதால் கொரோனா விரைவில் கட்டுப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் பரிசோதனை மனநிறைவு அளிக்கிறது! – ராமதாஸ் மகிழ்ச்சிஇது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீடில், “சென்னையில் இன்று ஏழாவது நாளாக ஊரடங்கு முழுக்கட்டுப்பாட்டுடன் தொடர்வது பாராட்டத்தக்கது. இதே கட்டுப்பாடு நீடிக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதுடன், அறிகுறி உள்ளவர்கள் சோதனையும் செய்து கொள்ள வேண்டும். அது தான் கொரோனா இல்லாத சென்னையை உருவாக்கும்!

சென்னையில் பரிசோதனை மனநிறைவு அளிக்கிறது! – ராமதாஸ் மகிழ்ச்சிசென்னையில் ஒரே நாளில் 14,000 கொரோனா ஆய்வு செய்யும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது. இதை 16,000, 20,000 ஆக அதிகரிக்க வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையையும் அதே அளவுக்கு உயர்த்த வேண்டும்; அதன் மூலம் கொரோனாவை விரைந்து ஒழிக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

http://


மற்றொரு ட்வீடில், “இந்திய வரலாற்றில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை முதன்முறையாக வழங்கி சமூகநீதி புரட்சி படைத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் 90-ஆவது பிறந்தநாள் இன்று. அனைவருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடப்பங்கீடு என்ற இலக்கை அடைய போராட இந்நாளில் உறுதியேற்போம்!” என்று கூறியுள்ளார்.