மண்டலத்திற்குள் பயணித்தாலும் குமரியில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை.. அதிருப்தியில் பயணிகள்!

மண்டலத்திற்குள் பயணித்தாலும் குமரியில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை.. அதிருப்தியில் பயணிகள்!

கொரோனா வைரஸால் தமிழகத்தில் முடக்கப்பட்டிருந்த பேருந்து சேவை 68 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசின் அறிவுத்தலின் படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்கு இடையே பேருந்துகள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மண்டலத்திற்குள் பயணித்தாலும் குமரியில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை.. அதிருப்தியில் பயணிகள்!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் ஒரே மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அந்த மண்டலங்களுக்கு உள்ளாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த பேருந்துகளில் வந்த பயணிகளை ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதனால் மக்கள் அங்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மண்டலத்திற்குள் பயணித்தாலும் குமரியில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை.. அதிருப்தியில் பயணிகள்!

நெடுநேரம் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படியே கொரோனா பரிசோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் பகல் வரை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த 200 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மண்டலங்களுக்குள் பயணித்தாலும் கொரோனா பரிசோதனை செய்து காத்திருக்க வைப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.