அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனா டெஸ்ட்?

 

அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனா டெஸ்ட்?

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடக்க விருக்கிறது. அதனால் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. பல இடங்களில் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவரோடு எப்போதும் அவரின் மனைவி மெலானியா உடன் செல்கிறார்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் முதன்மை உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனா டெஸ்ட்?

உடனே ட்ரம்ப்க்கும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் பரிசோதனை செய்ததில் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகிறது.

அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனா டெஸ்ட்?

இந்நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ்க்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் மைக் பென்ஸ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. டெஸ்ட் முடிவில் அவருக்கு நெகட்டிவ் என்று தெரிய வந்திருக்கிறது.

அதிபருக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா நோய்த் தொற்று, துணை அதிபருக்கு டெஸ்ட் என அமெரிக்காவில் கொரோனாவே பேசுபொருளாக மாறியுள்ளது.