அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனாவா?

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனாவா?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் தேர்தல் பரப்புரைகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனாவா?

இந்நிலையில் பல இடங்களில் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரோடு எப்போதும் அவரின் மனைவி மெலானியா உடன் செல்கிறார். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் முதன்மை உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன.

உடனே ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும்போடு உடன் இருந்தவர். அதனால், ட்ரம்ப்க்கும் அவருடன் பயணிக்கும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் கொரோனா தொற்று பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனாவா?

அதனால் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவிக்கும் கொரோனா பரிசோத்னை செய்யப்பட்டுள்ளது. தானும் தன் மனைவியும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று ட்ரம்ப் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹோப் ஹிக்ஸ் பெரும்பாலான நேரத்தில் மாஸ்க் அணிந்திருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ட்ரம்ப்க்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் முடிவில் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனாவா?

கொரோனா நடவடிக்கைகளில் ட்ரம்ப் அலட்சியமாக இருந்தது குறித்து விவாதம் சூடு பறந்துகொண்டிருக்கிறது. இது அவரின் தேர்தல் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையில், ட்ரம்ப்க்கே கொரோனா எனும் சூழல் தேர்தலில் என்னவாக எதிரொலிக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.