சென்னை புழல் சிறை கைதிகளுக்கு கொரோனா பரவி விட்டதா?.. முழுவீச்சில் நடைபெறும் சோதனை!

 

சென்னை புழல் சிறை கைதிகளுக்கு கொரோனா பரவி விட்டதா?.. முழுவீச்சில் நடைபெறும் சோதனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து மக்களை காக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு சென்ற கைதிக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு சென்ற 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சென்னை புழல் சிறை கைதிகளுக்கு கொரோனா பரவி விட்டதா?.. முழுவீச்சில் நடைபெறும் சோதனை!

புழல் சிறையில் மொத்தமாக 800க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை பெற்று வரும் நிலையில், பயிற்சிக்காக மற்ற மாவட்ட சிறைக் கைதிகள் சென்னைக்கு வருவது வழக்கம். அதன் படி இங்கு வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதி உறுதி செய்யப்பட்டதால் மற்ற கைதிகளுக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர்களுடன் தொடர்பில் இருந்த 74 கைதிகளுக்கும் 19 சிறைக்காவலர்களுக்கும் முதற்கட்டமாக பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவு வந்த பிறகு, மற்ற கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.