கொரோனா பரிசோதனை கட்டாயம் – தேர்தல் ஆணையம் கெடுபிடி!

 

கொரோனா பரிசோதனை கட்டாயம் – தேர்தல் ஆணையம் கெடுபிடி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, வாக்கு எண்ணிக்கை முடிவடைய தாமதமாக வாய்ப்பு உள்ளது. 2ம் தேதி நள்ளிரவுக்குள் முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறோம். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா பரிசோதனை கட்டாயம் – தேர்தல் ஆணையம் கெடுபிடி!

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். அதன் படி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதே போல, வாக்கு எண்ணும் தினத்திற்கு 72 மணி நேரம் முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டுமாம்.

மேலும், தடுப்பூசி போடாமல் இருக்கும் முகவர்களுக்கு தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜைக்கு சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.