“கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும்”

 

“கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும்”

கொரோனா சிகிச்சை தொடர்பாக, மருந்து பற்றாக்குறை, உள்ளிட்டவைகள் குறித்து செய்திதாள் வந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே, ரெம்டெசிவிர் மருந்தும், தடுப்பூசிகளும், ஆக்சிஜனும் ஒதுக்கப்படுகின்றன என தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

“கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும்”

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்சிஜன் தேவை தற்போது சமாளிக்க கூடிய வகையில் உள்ளதாகவும், படுக்கைகள் அதிகரிப்பது, விரைவாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பது குறித்த மனுதாரர்களின் கருத்துக்களை அரசிடம் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார். ஆங்கில மருத்துவம் இல்லாமல் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளும் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தில் தற்போது அக்சிஜன் பற்றக்குறை இல்லாவிட்டாலும், தமிழகத்திலிருந்து வருபவர்களும் அனுமதிக்கப்படுவதால் வரும் வாரங்களில் 65 டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால், மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கொரோனா பரிசோதனை எடுத்து அதன் முடிவுகளை தெரிவிக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆவதாக குற்றச்சாட்டுகள் வருவதால், எவ்வளவு சீக்கிரம் முடிவுகளை தெரிவிக்கப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த முடியும் எனதெரிவித்தனர். பயணிகள் வாகனங்களை அக்சிஜன் படுக்கைகள் கொண்டதாக மாற்றும்போது, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஆக்சிஜன் செலுத்தக்கூடாது என்ற கோரிக்கையையும் அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வழக்கு விசாரணை மே 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.