வருவாய் இழப்பை ஈடுகட்ட புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீது கொரோனா வரி விதிப்பு!

 

வருவாய் இழப்பை ஈடுகட்ட புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீது கொரோனா வரி விதிப்பு!

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட 60 நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், கொரோனா தடுப்பு பணிக்கான செலவுகளையும் அந்தந்த மாநில அரசே ஏற்பதால், நிதி நெருக்கடி நிலவுகிறது.

வருவாய் இழப்பை ஈடுகட்ட புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீது கொரோனா வரி விதிப்பு!

அதனால் நிதி நெருக்கடியை ஈடுகட்ட மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதே போல புதுவையிலும் பொருளாதார முற்றிலும் முடங்கியுள்ளதால் மதுபான வரிகள் உயர்த்தப்பட்டன. இந்த கொரோனா வைரஸால் புதுச்சேரியில் ரூ.325 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருமானத்தை ஈட்ட புதுச்சேரி அடுத்த கட்ட நடவடிக்கையாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது கொரோனா வரி விதித்துள்ளது. பெட்ரோல் மீது 5.75 சதவீதமும், டீசல் மீது 3.65 சதவீதமும் வரி விதித்துள்ளது. மதுபானங்கள் மீதான வரி உயர்த்தப்பட்டதால் அரசுக்கு வருமானம் கிடைத்த நிலையில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.