Home தமிழகம் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதைப் போல, புதுச்சேரியிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கில் தமிழகத்தை போலவே, புதுச்சேரியிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் அதற்கு கூடுதலாக 25% கொரோனா வரியும், புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்துக்கும் 20% கொரோனா வரியும் விதித்து அம்மாநில அரசு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் அரசாணை வெளியிட்டது. புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

This image has an empty alt attribute; its file name is download-68-300x150.jpg

இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலா என்ன சிங்கம்,புலி,கரடியா? அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய பாஜக மூத்த தலைவர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“போராடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படலாம்” : கல்லூரி முதல்வர் எச்சரிக்கை!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவ கல்லூரிகளை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் 47...

கோயம்பேட்டில் குவிந்த மக்கள் : போதிய பேருந்து வசதி இல்லாததால் நள்ளிரவில் போராட்டம்!

தொடர் விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் நேற்று இரவு மக்கள் கூட்டம் அலைமோதியது பரபரப்பு ஏற்பட்டது. வார இறுதி விடுமுறை...

வாகன விற்பனை அமோகம்… டிசம்பர் காலாண்டில் ரூ.1,556 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,556.3 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர...
Do NOT follow this link or you will be banned from the site!