4 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 40 ஆயிரமாக குறைவு!

 

4 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 40 ஆயிரமாக குறைவு!

இந்தியாவில் 40 லட்சத்துக்கு மேல் பதிவான கொரோனா பாதிப்பு தற்போது 40 ஆயிரமாக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. ஒரு சில மாநிலங்களிலேயே பாதிப்பு சற்று அதிகரித்திருக்கும் நிலையில் அம்மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. பாதிப்பு குறைந்த மாநிலங்கள் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் மே மாதத்தில் 4 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 40 ஆயிரமாக குறைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 40 ஆயிரமாக குறைவு!

இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் 111 மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். புதிய தடுப்பூசி கொள்கையின்படி அனைத்து மாநிலங்களுக்கும் 60 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் 4.61 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்ய வேண்டும் என அம்மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.