’30 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு’ : உயிரிழப்புகளும் குறைவு!

’30 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு’ : உயிரிழப்புகளும் குறைவு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,03,770 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

’30 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு’ : உயிரிழப்புகளும் குறைவு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 26,567 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் ஒரே நாளில் 385 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,40,958 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவில் இருந்து 91,78,946 பேர் குணமடைந்திருப்பதால் 3,83,866 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

’30 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு’ : உயிரிழப்புகளும் குறைவு!

கடந்த மே, ஜூன் மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நாளொன்றுக்கு இருக்கும் கொரோனா பரவலின் கணிசமாக குறைந்திருக்கிறது. உயிரிழப்புகளும் குறைந்த வண்ணமே உள்ளது. கொரோனா இரண்டாம் கட்ட அலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கையின் பேரில், அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியதே இதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.