குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு… ஆறுதல் அளிக்கும் ரிப்போர்ட்!

 

குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு… ஆறுதல் அளிக்கும் ரிப்போர்ட்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காட்டுத்தீயாய் பரவி வருவதால், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவிலேயே பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலமான மகாராஷ்டிராவிலேயே பாதிப்பு குறைந்திருக்கிறது. மே மாதம் பாதிப்பு உச்சத்தை தொடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததன் படி, இம்மாத தொடக்கத்தில் ஒரு நாள் பாதிப்பு 4 லட்சமாக பதிவானது. ஆனால், தற்போது பாதிப்பு கணிசமாக குறைந்து 3 லட்சத்துக்கும் கீழ் சென்றுள்ளது.

குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு… ஆறுதல் அளிக்கும் ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,81,386 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் 4,106 பேர் உயிரிழந்ததாகவும் 3,78,741 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 35,16,997 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு… ஆறுதல் அளிக்கும் ரிப்போர்ட்!

மேலும், மொத்த பாதிப்பு – 2,49,65,463, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை – 2,11,74,076, உயிரிழந்தோர் எண்ணிக்கை – 2,74,390 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் 4 லட்சத்துக்கும் மேல் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 3 லட்சமாக இருந்து வந்தது. இன்று 2.81 லட்சமாக குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், உயிரிழப்போர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.