இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

 

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், கொரோனா இரண்டாவது அலையில் இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

ஒரே நாளில் 55,722 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 75,50,273 ஆக உயர்ந்துள்ளதாகவும் 579 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 1,14,610 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 66.63 லட்சம் பேர் குணமடைந்ததால் தற்போது 7.72 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் குணமடைந்தோர் விகிதம் 88.26% ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாளொன்றுக்கு பாதிப்பு கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கு மேல் இருந்து வந்த நிலையில் தற்போது 50 முதல் 70 ஆயிரத்துக்குள்ளாகவே இருக்கிறது. அதே போல உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.