மீண்டும் தலைதூக்கும் கொரோனா; கோரப்பிடியில் இருந்து மீளுமா இந்தியா?

 

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; கோரப்பிடியில் இருந்து மீளுமா இந்தியா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து ஒரு மாதத்துக்கு முன்னர் தான் இந்தியா இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் வழக்கம் போல வெளியே செல்லத் தொடங்கினர். ஆனால், கடந்த ஒரு வார காலமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் அலை பாதிப்பு உச்சத்தில் இருந்த போதே மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன் படியே, பாதிப்பு திடீரென அதிகரிப்பதால் மூன்றாம் அலை உருவாகுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; கோரப்பிடியில் இருந்து மீளுமா இந்தியா?

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 562 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் 36,668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தற்போது 4,10,353 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 40 ஆயிரமாக இருந்த நிலையில் நேற்று 30 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. இன்று 42 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.