‘குறையும் கொரோனா பரவல்’ நாடு முழுவதும் 5.70 லட்சம் பேருக்கு சிகிச்சை!

‘குறையும் கொரோனா பரவல்’ நாடு முழுவதும் 5.70 லட்சம் பேருக்கு சிகிச்சை!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘குறையும் கொரோனா பரவல்’ நாடு முழுவதும் 5.70 லட்சம் பேருக்கு சிகிச்சை!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழலில், மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த மாதத்தில் இருந்து பாதிப்பு குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு இந்தியாவில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி வந்தது. ஆனால் தற்போது, கொரோனா பரவலின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்திருக்கிறது. இதனால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது தெளிவாக தெரிந்தாலும், பண்டிகை நெருங்குவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

‘குறையும் கொரோனா பரவல்’ நாடு முழுவதும் 5.70 லட்சம் பேருக்கு சிகிச்சை!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 46,964 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 81,84,083 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 470 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,22,111 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவில் இருந்து 74,91,513 பேர் மீண்டதால் 5,70,458 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.