சென்னையை அல்லாது பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

 

சென்னையை அல்லாது பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் உபகரணங்கள், சிறப்பு மருத்துவமனை முகாம்கள் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிவேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சென்னையை அல்லாது பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மக்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்குப் புலம் பெயர ஆரம்பித்த நிலையில், மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு பன்மடங்காக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 260 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 4,640 ஆக அதிகரித்துள்ளது. அதே போல கடலூர் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,379 ஆக உயர்ந்துள்ளது.