புதுச்சேரியில் கட்டுக்குள் வராத கொரோனா; மேலும் 543 பேர் பாதிப்பு!

 

புதுச்சேரியில் கட்டுக்குள் வராத கொரோனா; மேலும்  543 பேர் பாதிப்பு!

புதுச்சேரியில் மேலும் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், கூட்டத்தொடர் அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்த எம்எல்ஏவின் மூலமாக சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கும். அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா பரவியது.

புதுச்சேரியில் கட்டுக்குள் வராத கொரோனா; மேலும்  543 பேர் பாதிப்பு!

இதனையடுத்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர புதுச்சேரி அரசு, அதிரடி நடவடிக்கைகளை கையாண்டது. அதாவது கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் முழுமுடக்கமும், வாரத்திற்கு ஒரு நாள் புதுச்சேரி முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதே போல கொரோனா பரிசோதனை அதிகரிக்க அரசு உத்தரவிட்டதன் பேரில், மக்களுக்கு அதிகளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் புதுச்சேரியில் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக இல்லை.

இந்த நிலையில் புதுச்சேரியில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 22,456 ஆக அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.