சென்னையில் குறைந்து வரும் கொரோனா; பிற மாவட்டங்களில் வேகமெடுக்கும் பாதிப்பு!

 

சென்னையில் குறைந்து வரும் கொரோனா; பிற மாவட்டங்களில் வேகமெடுக்கும் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் அரசும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் இருப்பதாகவும் அதனை கடக்க மக்களின் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். குறிப்பாக சென்னையில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

சென்னையில் குறைந்து வரும் கொரோனா; பிற மாவட்டங்களில் வேகமெடுக்கும் பாதிப்பு!

பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5,900 ஆக அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,043 ஆக அதிகரித்துள்ளது. அதே போல தேனி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மேலும் 454 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,642 ஆக அதிகரித்துள்ளது. பெருந்தொற்றாக மாறியுள்ள இந்த கொரோனா பாதிப்பு, எப்போது முடிந்து பழைய நிலை திரும்பும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.