இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா; 1,132 பேர் மரணம்!

 

இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா; 1,132 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தான் கொரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஏற்பட்ட கொரோனா தொற்று விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா; 1,132 பேர் மரணம்!

அதில், இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா பரவியதால் பாதிப்பு 51,18,254 ஆக உயர்ந்துள்ளதாகவும், ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,132 பேர் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,196 ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 40.25 லட்சம் பேர் குணமடைந்ததால் 10.09 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.63 சதவீதம் ஆக இருப்பதாகவும் குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவீதம் ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.