இந்தியாவில் 10.10 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை: முழு விவரம் வெளியீடு!

 

இந்தியாவில் 10.10 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை: முழு விவரம் வெளியீடு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. இருப்பினும் பாதிப்பு குறைந்து வருவதாகவும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 10.10 லட்சம் பேருக்கு கொரோனா சிகிச்சை: முழு விவரம் வெளியீடு!

அதில், ஒரே நாளில் 92,605 பேருக்கு கொரோனா உறுதியானதால் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 54,00,619 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 86,752 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 43.03 லட்சம் பேர் குணமடைந்ததால் 10.10 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.61% ஆக குறைந்திருப்பதாகவும் குணமடைந்தோர் விகிதம் 79.28% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.