கொரோனாவின் கோரப்பிடியில் சென்னை.. அரசு குழந்தைகள் காப்பகத்திலும் பாதிப்பு!

 

கொரோனாவின் கோரப்பிடியில் சென்னை.. அரசு குழந்தைகள் காப்பகத்திலும் பாதிப்பு!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வடசென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்த ஆதரவற்ற குழந்தைகள் தங்க வைக்கப்பட்ட காப்பகத்திலும் கொரோனா பரவியுள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் சென்னை.. அரசு குழந்தைகள் காப்பகத்திலும் பாதிப்பு!

கடந்த இரண்டு மாதங்களாக தற்காலிகமாக அந்த காப்பகத்தில் 55 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அந்த சிறுவர்களுளை 23 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுவர்கள் அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கி விட ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அரசு ஏற்கனவே நியமித்துள்ள நிலையில், தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.