கோவையில் குறையும் கொரோனா பாதிப்பு – அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

 

கோவையில் குறையும் கொரோனா பாதிப்பு – அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவத் தொடங்கியதும், அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், சென்னையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக, பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இத்தகைய சூழலில் தான், சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை முதலிடத்துக்கு வந்தது. தற்போது வரையில் கோவையில் தான் அதிக பாதிப்புகள் பதிவாகிறது.

கோவையில் குறையும் கொரோனா பாதிப்பு – அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

கோவையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், நேரிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை வார்டுக்குள்ளேயே சென்று ஆய்வு நடத்தினார். இந்த நிலையில், கோவையில் பாதிப்பு 60% குறைந்திருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இனி வரும் தடுப்பூசிகள் கிராமப்புறங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும் அதற்கான சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை வழங்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.