’90 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 584 பேர் மரணம்!

 

’90 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 584 பேர் மரணம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை கடந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நிலை மாறி, தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தற்போது கொரோனா இரண்டாம் அலையில் இருப்பதால் அனைத்து நாடுகளும் கவனமுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி, இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

’90 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 584 பேர் மரணம்!

இந்த நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 45,882 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 90,04,366 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 584 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,32,162 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 84,28,410 பேர் குணமடைந்ததால் தற்போது 4,43,794 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.