புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு திறப்பு!

 

புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு திறப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், படுக்கை வசதிகள் அதிகமாக தேவைப்பட்டது. அதனால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிறைக்கைதிகளுக்கும் கொரோனா பரவியதால், சிறைகளிலேயே கொரோனா வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு திறப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரையில், இன்று மேலும் 455 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 19,413 ஆக அதிகரித்துள்ளது. அம்மாவட்டத்தில் 14,731 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் தற்போது 3,903 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புழல் சிறையில் தற்போது கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது. 40 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் சிவி சண்முகம் திறந்து வைத்துள்ளனர்.