‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

 

‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் விதமாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், அரங்கங்கள் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம் அதிநவீன வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை நாளை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

750 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த இடத்தில், 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்காகவும் ஆக்சிஜன் வசதியுடன் 300 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல் கொரோனா பாதிப்புடன் மூச்சுத்திணறலால் வருபவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 25 வென்டிலேட்டர்கள் தாயாராக இருப்பதாகவும் அவர்களின் ,மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த டிவி, காணொளி யோகா பயிற்சி, நூலக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் அவர்களது குடும்பத்துடன் பேச வைஃபை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொரோனா சிறப்பு மருத்துவமனை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.