Home உலகம் ’இலங்கையில் கொரோனா அதிகரிக்கக்கூடும்’ இலங்கை சுகாதாரத் துறை தகவல்

’இலங்கையில் கொரோனா அதிகரிக்கக்கூடும்’ இலங்கை சுகாதாரத் துறை தகவல்

கொரோனாவினால் பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சில நாடுகள் கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் காட்டின. அதனால், அந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகக் குறைந்த அளவே உள்ளன. உதாரணமாக,  நியூசிலாந்து, இலங்கையைச் சொல்லலாம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 38 லட்சத்து  44 ஆயிரத்து 178 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 51 லட்சத்து 48 ஆயிரத்து 403 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 12 ஆயிரத்து 659 பேர்.

இலங்கையில் இன்றைய தேதி வரை கொரொனாவின் மொத்த பாதிப்பு 3,379 பேர். அவர்களில் 3,230 பேர் சிகிச்சை பலனால் குணம் அடைந்துவிட்டனர். 13 பேர் இதுவரை கொரோனாவால் இலங்கையில் மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால் இலங்கை அரசு கடும் எச்சரிக்கையோடு இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் செய்கிறது.

இலங்கையில் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நோய் தடுப்பு பிரிவு அதிகாரி, ‘கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் நாம் அலட்சியமாக இருந்தால் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்கக்கூடும். எனவே, சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி அதன்படி பொதுமக்கள் நடக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

சென்ற வாரத்தில் ரஷ்ய விமானப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருந்ததைக் கண்டறிந்து அவரைத் தனிமைப்படுத்தினர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கடுமையாக இலங்கை அரசு நடந்துகொள்வதால் அந்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது.  

மாவட்ட செய்திகள்

Most Popular

பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம்

பஞ்சாபை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானிலும் அம்மாநில அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு...

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது.. திக்விஜய சிங்

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது என்று காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்தார். மத்திய...

நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி…. சிவ சேனா முடிவால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு

மகாராஷ்டிராவில் கவர்னர் ஒதுக்கீட்டில் நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க சிவ சேனா முடிவு செய்துள்ளது. இது சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது… பா.ஜ.க. முதல்வர்

நாளையே கடவுள் முதல்வரானாலும் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது என்று கோவா பா.ஜ.க. முதல்வர் தெரிவித்தார். கோவாவின் பானாஜியில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்...
Do NOT follow this link or you will be banned from the site!