77 ஆயிரத்தைக் கடந்த மரண எண்ணிக்கை – மெக்சிகோவில் கட்டுக்கடங்காத கொரோனா

77 ஆயிரத்தைக் கடந்த மரண எண்ணிக்கை – மெக்சிகோவில் கட்டுக்கடங்காத கொரோனா

கொரொனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. கொரோனா பாதிப்பு தொடக்கம் முதலே இங்கு அதிகமாகவே இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 38 லட்சத்து  44 ஆயிரத்து 178 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 51 லட்சத்து 48 ஆயிரத்து 403 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 12 ஆயிரத்து 659 பேர்.

77 ஆயிரத்தைக் கடந்த மரண எண்ணிக்கை – மெக்சிகோவில் கட்டுக்கடங்காத கொரோனா

மெக்சிகோவில் இன்றைய வரைக்குமான கொரோனா மொத்த பாதிப்பு 7 லட்சத்து 38 ஆயிரத்து 163. இதில் சிகிச்சையில் குணமடைந்தவர்கள் 5 லட்சத்து 30 ஆயிரத்து 945 பேர். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவர்கள் 77,163 பேர்.

மார்ச் மாதம் 19-ம் தேதிதான் மெக்சிகோவில் முதல் கொரோனா மரணம் நடந்தது. ஏப்ரல் 24 ஆம் தேதி 1000 யைக் கடந்தது. ஜூன் 2-ம் தேதி  10 ஆயிரத்தையும், ஜூலை 5-ம் தேதி 30 ஆயிரத்தையும் ஆகஸ்ட் 7-ம் தேதி 50 ஆயிரத்தையும் மரணங்களின் எண்ணிக்கை கடந்தது.

77 ஆயிரத்தைக் கடந்த மரண எண்ணிக்கை – மெக்சிகோவில் கட்டுக்கடங்காத கொரோனா

ஆகஸ்ட் 23-ம் தேதி வரை மெக்சிகோவின் இறப்பு எண்ணிக்கை 60,254. இன்று செப்டம்பர் 30 அன்று 77,163  ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 04 –ம் தேதி ஒரே நாளின் அதிகப்பட்ச மரணமாக 1092 பேர் இறந்திருக்கிறார்கள்.

77 ஆயிரத்தைக் கடந்த மரண எண்ணிக்கை – மெக்சிகோவில் கட்டுக்கடங்காத கொரோனா

மெக்சிகோ நாட்டின் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என அந்நாட்டின் எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.