ஒலிம்பிக் நடக்க இருக்கும் ஜப்பானில் கொரோனா நிலவரம்?

 

ஒலிம்பிக் நடக்க இருக்கும் ஜப்பானில் கொரோனா நிலவரம்?

ஒலிம்பிக் என்பது உலகமே கொண்டாடும் திருவிழா. வழக்கமாக இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உலகம் முழுவதும் சுழற்றி அடித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, 2021 ஆம் ஆண்டுக்கு ஒலிம்பிக் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த வருடம் ஜூலை மாதம் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வரை ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காகக் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசும் ஒலிம்பிக் குழுவும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஜப்பானில் கொரோனா நிலவரம் என்னவென்பதைப் பார்ப்போம்.

ஒலிம்பிக் நடக்க இருக்கும் ஜப்பானில் கொரோனா நிலவரம்?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 19 லட்சத்து 95 ஆயிரத்து 218 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 749 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 631 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 96,64,838 பேர்.

ஜப்பானில் இதுவரையிலான கொரோனா மொத்த பாதிப்பு 94,524 பேர். இவர்களில் 87, 666 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 1685 பேர் இறந்துவிட்டனர்.

ஒலிம்பிக் நடக்க இருக்கும் ஜப்பானில் கொரோனா நிலவரம்?

ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதியன்று 1998 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதே நாட்டின் ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். நேற்று (அக்டோபர் 22) 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இறந்தவர்கள் 6 பேர். ஜப்பான் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவிகிதம்.

ஜப்பானில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. இன்னும் ஒலிம்பிக் தொடங்க பத்து மாதங்கள் இருக்கிறது. அதற்குள் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் எனும் நம்பிக்கையும் இருப்பதால் சிக்கல் ஏதும் இருக்காது என்றே தெரிகிறது.