குணமடைந்தவர்களில் 61 சதவிகிதம் இந்த 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!

குணமடைந்தவர்களில் 61 சதவிகிதம் இந்த 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!

கொரோனாவின் தாக்கமும் பாதிப்பும் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், கடந்த சில நாட்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சற்றே குறைந்து காணப்படுகிறது.

மையம் உலக நாடுகளுக்கு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 24 லட்சத்து  97 ஆயிரத்து 379 பேர்.

குணமடைந்தவர்களில் 61 சதவிகிதம் இந்த 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 14 லட்சத்து 29 ஆயிரத்து 838 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 49 ஆயிரத்து 367 பேர்.

இந்தியாவில், தற்போது 7 லட்சத்திற்கும் குறைவாக 6,80,680 பேர்  இந்த  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 8.71 சதவீதமாகும்.

குணமடைந்தவர்களில் 61 சதவிகிதம் இந்த 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!

இந்தியாவில் இதுவரை  குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 7  லட்சத்தைத்  தாண்டி, 7,16,046 ஆக  உள்ளது.  நாட்டில்  குணமடைந்தோரின்  விகிதமும் 89.78% ஆக முன்னேறியுள்ளது.

நாட்டின் மொத்த குணமடைந்தோரில் 61 சதவீதத்தினர் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்களே.

குணமடைந்தவர்களில் 61 சதவிகிதம் இந்த 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!

கடந்த 24 மணி நேரத்தில் 67,549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 53,370 பேருக்கு புதிதாக நோய்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 650 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிய நோயாளிகள் அதிகரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் இடத்தில் கர்நாடகாவும், நான்காம் இடத்தில் மேற்கு வங்கமும் உள்ளன. தமிழ்நாடு ஏழாம் இடத்தில் உள்ளது.

குணமடைந்தவர்களில் 61 சதவிகிதம் இந்த 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!

தினசரி மரணங்களின் அடிப்படையாலான மாநிலப் பட்டியலில், மகாராஷ்டிரா முதல் இடத்திலும் மேற்கு வங்கம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு ஆறாம் இடத்திலும் உள்ளது.