கொரோனா 2ஆம் அலை எதிரொலி: ஷேர் மார்கெட் கடும் வீழ்ச்சி!

 

கொரோனா 2ஆம் அலை எதிரொலி: ஷேர் மார்கெட் கடும் வீழ்ச்சி!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக இருக்கிறது. தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 1.68 லட்சத்தை தொட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. முந்தைய பரவலை விட இதன் தீவிரம் அதிகமாக இருப்பதாலும், பொருளாதாரம் மீண்டும் சரிவைச் சந்திக்கக் கூடாது என்பதாலும் ஊரடங்கு அல்லாமல் கட்டுப்பாடுகள் மட்டுமே இறுக்கப்படுகின்றன.

கொரோனா 2ஆம் அலை எதிரொலி: ஷேர் மார்கெட் கடும் வீழ்ச்சி!

அதேசமயம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) முழு ஊரங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமலில் இருக்கிறது. டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரங்கு போடப்பட்டுள்ளது. கொரோனாவின் முதல் அலையால் வீழ்ந்த பொருளாதாரம் எழுந்துவந்த நிலையில், இரண்டாவது அலையால் மெல்ல மெல்ல வீழ்ந்து வருகிறது.

கொரோனா 2ஆம் அலை எதிரொலி: ஷேர் மார்கெட் கடும் வீழ்ச்சி!

அதிகரிக்கும் கட்டுப்பாடுகளால் பொருளாதார நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. இது பங்குச்சந்தையிலும் கடந்த இரு வாரங்களாக எதிரொலித்துள்ளது. நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. முந்தைய அமர்வில் சற்று சரிவினைக் கண்டு இருந்த சந்தையானது, இன்றும் சரிவிலேயே தொடருகிறது. அதன்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,643.07 புள்ளிகள் சரிந்து 47,948.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 514.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,320.05 புள்ளிகளில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.