கொரோனா குறைந்துள்ளது ; பாராட்டத்தான் ஆளில்லை: முதல்வர் பழனிசாமி

 

கொரோனா குறைந்துள்ளது ; பாராட்டத்தான் ஆளில்லை: முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் பழனிசாமி திருவாரூர், கடலுார், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர், அரியலூரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா குறைந்துள்ளது ; பாராட்டத்தான் ஆளில்லை: முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் அரியலூரில் பேசிய முதல்வர் பழனிசாமி, “இந்தியாவில் கொரோனா இறப்பு விகித‌த்தை குறைத்த மாநிலம் தமிழகம் . கேரளா, டெல்லி மாநிலங்களை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் 6,300 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன . எதிர்கட்சிகள் வேண்டுமென்றே அரசு மீது குற்றம்சாட்டுகின்றன. தமிழகத்தில் கொரோனா அதிகரித்ததை விமர்சித்தவர்கள் தற்போது குறைந்துள்ளதை பாராட்டவில்லை” என்று தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரூ. 26.2 கோடியிலான 14 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ரூ. 36.73 கோடியில் முடிவுற்ற 39 திட்டங்களை தொடங்கி வைத்தார். அத்துடன் ரூ.129 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.