குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

கொரோனா நோய்த் தொற்று பலவித சந்தேகங்களை மக்களிடம் நாள்தோறும் தோன்றச் செய்துகொண்டே இருக்கிறது. ஏனெனில், நோய்த் தொற்றால் புதிய நோயாளிகள் தினமும் அதிகரித்து வருகின்றனர். குணமடைபவர்களின்  சதவிகிதம் அதிகம். ஆனாலும் இறப்போர் எண்ணிக்கையும் நாள்தோறும் கூடிவருகிறது.

எந்த வகை மாஸ்க் அணியலாம்… மாஸ்கை ரிமூவ் செய்வது எப்படி… அந்த மாஸ்கை குப்பைத் தொட்டியில் போடலாமா… எத்தனை நிமிடம் சோப்பு போட்டு கையைக் கழுவ வேண்டும்… காய்கறிகளை வெறும் தண்ணீர் விட்டு அலசினால் போதுமா… எண்ணற்ற சந்தேகங்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன.

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

இவையெல்லாம், இயல்பாக இருக்கும் வீடுகளில் ஏற்படும் சந்தேகங்கள். கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் வழிகாட்டுவார்கள். ஆயினும் சில சந்தேகங்கள் பலருக்கு வருகின்றன.

குறிப்பாக, குழந்தைகளை ஒட்டிய சந்தேகம் மிக முக்கியமானவை. அவற்றை மற்றவர்களின் ஆலோசனைகளைக் கொண்டு தீர்த்துக் கொள்வதை விடவும் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்பதே சரியானதாக இருக்கும்.

ஏற்கெனவே, ஒரு கேள்வி – பதிலில், கொரோனா பாதித்த ஒரு தாயின் குழ்ந்தைக்கு, மற்றொரு பெண் தாய்ப்பால் கொடுக்கலாமா என்று பார்த்தோம்.

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

இப்போது, குழந்தைக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்துவிட்டது. ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா நெகட்டிவ். இந்த நிலையில் அந்தத் தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? அப்படிக் கொடுப்பதனால் குழந்தையின் மூலம் தாய்க்குக் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.

இந்தக் கேள்விக்கான பதிலை அளிக்கிறார் டாக்டர் அரசர் சீராளர்  ”எய்ட்ஸ், கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றுக்கு ஆளான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி தாய்ப்பால் புகட்டலாம். அதன் மூலம் நோய் பரவாது.

கொரோனா பாதித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதே போன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டும் தொற்று இருந்தாலும்,  தாய்ப்பால் கொடுக்கலாம்.

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்
Young mother breastfeeding her newborn baby boy at home

ஆனால் இந்த இடத்தில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  புற்றுநோய் மற்றும் கதிரியக்க சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மிக அவசியமான ஒன்று. அதனால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை குடும்பத்தாரும், சுற்றத்தாரும், இந்த சமூகமும் உறுதி செய்யவேண்டும். அதோடு அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் ஊக்கப்படுத்துவதும் நம் அனைவரின் கடமையாகும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படை உணவாக மட்டுமல்லாமல் இயற்கை கொடுத்த வரமாகத் தாய்ப்பால் திகழ்கிறது. மனிதன் மனிதனாக வளர்வதற்கு தாய்ப்பால் மிகவும் உதவி புரிகிறது.

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

பெரும்பாலும் தாய்ப்பால் கொடுப்பதற்கான உகந்த சூழல் இல்லாதது மற்றும் மன அழுத்தம் காரணமாகவே பல்வேறு தாய்மார்கள் தங்களுக்கு தாய்ப்பால் போதிய அளவில் சரியாக சுரப்பதில்லை என மருத்துவரை அணுகி, மாற்றுப்பால் கொடுக்க பரிந்துரைக்க வேண்டி கோரிக்கை விடுக்கின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அனைவரும் தாய்மார்களின் மனநிலை மற்றும் அவர்கள் வசிக்கும் சூழல் ஆகியவற்றைக் கண்டறிந்து தாய்மார்களுக்கு போதிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்” என்கிறார்.

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

கொரோனா காலம் மட்டுமல்ல எப்போதுமே எந்தவித சந்தேகங்கள் தோன்றக்கூடும். அப்படித் தோன்றும்பட்சத்தில் அவற்றிற்கு உரிய நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். அதைத் தவிர்த்து சந்தேகத்தை பயமாக மாற்றிக்கொண்டால் மனநோயாக மாறிவிடக்கூடும்.