தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை!- முதல்வர் அறிவிப்பு

 

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை!- முதல்வர் அறிவிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை!- முதல்வர் அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. ரத்தத்தில் உள்ள ஒரு திரவம் பிளாஸ்மா. ரத்தத்தில் 45 சதவிகிதம் சிவப்பு மற்றும் வெள்ளை தட்டையணுக்கள் உள்ளன. எஞ்சிய 55 சதவிகிதம்தான் பிளாஸ்மா. ஒரு வைரஸ் மனித உடலில் வந்தால் அதை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவில்தான் தோன்றுகின்றன. இதன் காரணமாகத்தான் பிளாஸ்மா மூலம் நோயாளிகளை குணப்படுத்தலாம் என கூறுகின்றனர் மருத்துவர்கள். உடலில் இருந்து ரத்தம் எடுப்பதுபோல் பிளாஸ்மா எடுப்பதற்கென தனி எந்திரங்கள் இருக்கின்றன. பிளாஸ்மா தானம் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதன் பின்னர் அவரது உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு அதிலிருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படுகிறது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையை தொடங்கிவிட்டன. இந்த சிகிச்சையால் பல நோயாளிகளின் குணமடைந்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை!- முதல்வர் அறிவிப்பு

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசயி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார், திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா தானம் பெறப்படும். பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம். சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது” என்று தெரிவித்துள்ளார்.