கொரோனா பாதிப்பு… கைவிட்ட பிள்ளைகள்… உயிரை மாய்த்த தந்தை!- மதுரை அதிர்ச்சி

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட தந்தை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (பெயர் மாற்றம்). 60 வயதான இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பெற்ற பிள்ளைகள் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளனர். எங்கு செல்வது என்று தெரியாமல் அந்த முதியவர் சாலையோரங்களில் சுற்றித்திரிந்துள்ளார். இதனைப் பார்த்த சுகாதாரத்துறையினர், அவருக்கு கொரோனா பரிசோதனை எடுத்ததில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த முதியவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரியின் கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில், பெற்ற பிள்ளைகளே கைவிட்டதால் மனவேதனையுடன் இருந்துள்ளார் அந்த முதியவர். இதனிடையே, முகாமில் உள்ள மாடியில் இருந்து முதியவர் குதித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறையினர், அவரை மீட்டு மதுரையில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முதியவர் உயிரிழந்தார். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர் மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisment -

Most Popular

கொரோனாவின் கோரதாண்டவம்… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 15 லட்சத்து 90ஆயிரத்து 635ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 37ஆயிரத்து 436 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் ரூ.50000 நிதியுதவி

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 50 ஆயிரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்...

பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..

கொரானாவால் எந்த தொழிலையும் மாஸ்க் போட்டுகொண்டு,ம் சமூக இடைவெளியுடனும் செய்யலாம் .ஆனால் பாலியல் தொழிலை அப்படி நடத்த முடியுமா ?முடியாது ,அதனால் அதை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத பாலியல் தொழிலாளர்கள்...
Open

ttn

Close