கொரோனா: சென்னையில் குணமடைவோர் சதவிகிதம் 10 நாளில் 17 சதவிகிதம் அதிகரிப்பு!

 

கொரோனா: சென்னையில் குணமடைவோர் சதவிகிதம் 10 நாளில் 17 சதவிகிதம் அதிகரிப்பு!

இந்த ஆண்டில் அதிகம் உலகில் அதிகம் பயன்படுத்திய வார்த்த ‘கொரோனா’ என்பதாகத்தான் இருக்கும். கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனாவின் அழிவு, இப்போது உலகின் பல நாடுகளிலும் உச்சத்தில் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தன் ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா இப்போது நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது. தமிழகமும் இதில் விதிவிலக்கல்ல. இந்திய அளவில் அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்டு மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

கொரோனா: சென்னையில் குணமடைவோர் சதவிகிதம் 10 நாளில் 17 சதவிகிதம் அதிகரிப்பு!

தொடக்கத்தில் பெருநகரங்களில் மட்டுமே கொரோனாவின் தாக்கம் அதிகம் இருந்தது. தற்போது சின்னக் கிராமங்களில்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக முந்தைய வாரங்களை விடவும் நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. நேற்று 1078 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா: சென்னையில் குணமடைவோர் சதவிகிதம் 10 நாளில் 17 சதவிகிதம் அதிகரிப்பு!

சென்னையில் கொரோனா நோயிலிருந்து குணம் அடையும் எண்ணிக்கையின் சதவிகிதமும் நாள்தோறும் அதிகரித்துவருவது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். ஜூலை 05-ம் தேதி குணமடைவோர்களின் சதவிகிதம் 62 ஆக இருந்தது. அதுவே இன்று (ஜூலை 15) 79 சதவிகிதமாக உள்ளது. பத்து நாள்களில் 17 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல ஜூலை 05 -ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிப்பவர்களின் எண்ணிக்கை 24,195 ஆகவும் மொத்த சதவிகிதத்தில் 36 ஆகவும், ஜூலை 15 (இன்று) சிகிச்சை எடுத்துக்கொண்டிப்பவர்களின் எண்ணிக்கை 15814 ஆக, மொத்த சதவிகிதத்தில் 20 ஆகவும் உள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் சதவிகிதம் நாள்தோறும் அதிகரித்துவருவதற்கு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை முக்கியமான காரணமாகும்.