`நாங்க இப்போ ஜாலியா இருக்கோம்!’- விளாத்திகுளத்தில் நொண்டி விளையாடும் கொரோனா நோயாளிகள்

`நாங்க இப்போ ஜாலியா இருக்கோம்!’- விளாத்திகுளத்தில் நொண்டி விளையாடும் கொரோனா நோயாளிகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நொண்டி விளையாடுகின்றனர். இந்த மகிழ்ச்சியான சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மருத்துவமனையில் நடந்து வருகிறது.

`நாங்க இப்போ ஜாலியா இருக்கோம்!’- விளாத்திகுளத்தில் நொண்டி விளையாடும் கொரோனா நோயாளிகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளிலும், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாமிகளிலும் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தற்கொலை என்ற விபரீத முடிவை கையிலெடுக்கும் அளவிற்கு மன அழுத்த‌தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

`நாங்க இப்போ ஜாலியா இருக்கோம்!’- விளாத்திகுளத்தில் நொண்டி விளையாடும் கொரோனா நோயாளிகள்

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை விளையாட்டு திடலாக மாறிப்போய் இருக்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நொண்டி விளையாடுகின்றனர். இதனால் அவர்களின் மன அழுத்தம் குறைவதாக கூறப்படுகிறது. “நாங்கள் இப்போது ஜாலியாக இருக்கிறோம். கொரோனாவை பற்றி எங்களுக்கு கவலையில்லை” என்கின்றனர் நொண்டி விளையாடும் பாதிக்கப்பட்டவர்கள்.

நோய்க்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், இது போல மன‌ அழுத்தம் போக்கும் சில முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.