மகனுக்கு கொரோனா! வீட்டு வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்த தாய்!!

 

மகனுக்கு கொரோனா! வீட்டு வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்த தாய்!!

ஜூலை 31ஆம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடியவுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது நிலையை எட்டியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் அதன் இரண்டாம் நிலையான உள்ளூர் பரவல் நிலையில் தான் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தியா கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டத்துக்கும், மூன்றாவது கட்டத்துக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதாக அண்மையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. ஆனால் தமிழகத்தில் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது.

மகனுக்கு கொரோனா! வீட்டு வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்த தாய்!!
இந்நிலையில் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அங்காளம்மன் தெருவில் வசிக்கும் 80 வயதான மூதாட்டி சந்திராவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுகள் வெளிவரவில்லை. அதற்குள் சந்திரா வீட்டு வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் 3 மணி நேரமாக சடலத்தை யாரும் எடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இப்படி திடீரென உயிரிழந்ததது கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.