அவங்க கடைசியா தான் ஓட்டு போடணும்.. தேர்தல் ஆணையம் கெடுபிடி!

 

அவங்க கடைசியா தான் ஓட்டு போடணும்.. தேர்தல் ஆணையம் கெடுபிடி!

கொரோனா நோயாளிகள் கடைசியாகத் தான் வாக்களிக்க வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்குப் பட்டியல் பணிகளை முடித்திருக்கும் தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரம், வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து விட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், அரசியல் கட்சிகள் அதை பின்பற்றுகிறதா என தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

அவங்க கடைசியா தான் ஓட்டு போடணும்.. தேர்தல் ஆணையம் கெடுபிடி!

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் ஆணையத்துக்கு சவால் நீடிக்கிறது. ஒவ்வொரு கட்ட நகர்வும் கொரோனாவை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா நோயாளிகள் எப்படி வாக்களிப்பார்கள்? அதற்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது போன்ற கேள்விகள் தற்போது வெகுவாக எழுந்த வண்ணம் உள்ளது.

அவங்க கடைசியா தான் ஓட்டு போடணும்.. தேர்தல் ஆணையம் கெடுபிடி!

இந்த நிலையில், பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் தான் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் ஸ்ட்ரிக்ட்டாக தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி வரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.