ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் குறித்து லைவ் கமென்ட்ரி!

 

ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் குறித்து லைவ் கமென்ட்ரி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 80லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 29ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20லட்சத்து 96ஆயிரத்து 516ஆக அதிகரித்துள்ளது. ஆனால் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,1,781ஆக உள்ளது. இன்று இன்று 478பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,232ஆக அதிகரித்துள்ளது.

Tamil Nadu announces dedicated hospital for COVID-19 patients - The Hindu

கடந்த ஆண்டு கொரோனா பாதித்த நபர்களின் தொலைபேசி எண்ணை பொதுவில் வெளியிட்டு சர்ச்சை எழுந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு மருத்துவம் பெற்று வரும் உள்நோயாளிகளின் உடல்நிலை விவரத்தை பொதுமக்களுக்கு டிஜிட்டல் பலகை மூலமாக “சீரான நிலை”, “கவலைக்கிடம்”, “மிகவும் கவலைக்கிடம்” என Cricket Match Score / தேர்தல் முன்னிலை விவரம் போல வெளியிட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை பார்க்கும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைகின்றனர்.