ஆக்சிஜன் தட்டுப்பாடு… துடிதுடித்து உயிரிழந்த கொரோனா நோயாளிகள் : அதிர்ச்சி சம்பவம்!

 

ஆக்சிஜன் தட்டுப்பாடு… துடிதுடித்து உயிரிழந்த கொரோனா நோயாளிகள் : அதிர்ச்சி சம்பவம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி இருப்பதோடு ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாக தெரிகிறது. அதே போல மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளன.

ஆக்சிஜன் தட்டுப்பாடு… துடிதுடித்து உயிரிழந்த கொரோனா நோயாளிகள் : அதிர்ச்சி சம்பவம்!

இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி, ஆக்சிஜன் விநியோகம் செய்யும் மையங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்துள்ளார். இதனிடையே, ’ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற ரயில் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்யவும் ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், மத்தியப் பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு… துடிதுடித்து உயிரிழந்த கொரோனா நோயாளிகள் : அதிர்ச்சி சம்பவம்!

மத்தியப் பிரதேசம், ஷாதோலில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 6 பேர் ஆக்சிஜன் சப்ளை திடீரென தீர்ந்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இது குறித்து பேசிய மருத்துவர், திரவ ஆக்சிஜன் தீர்ந்து போனதால் அந்த நோயாளிகள் உயிரிழந்தனர் என்றும் தற்போது ஜம்போ சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார். ஆனால், குறைவான அளவில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டதால் தான் அவர்கள் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.