‘சென்னை ஏர்போர்ட்டில்’ சைலண்டாக நின்ற கொரோனா நோயாளி… அதிகாரிகள் அதிர்ச்சி!

 

‘சென்னை ஏர்போர்ட்டில்’ சைலண்டாக நின்ற கொரோனா நோயாளி… அதிகாரிகள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், சென்னையிலிருந்து அந்தமான் உட்பட 6 இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சான்றிதழில் நெகட்டிவ் என இருந்தால் மட்டுமே பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இல்லையெனில் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

‘சென்னை ஏர்போர்ட்டில்’ சைலண்டாக நின்ற கொரோனா நோயாளி… அதிகாரிகள் அதிர்ச்சி!

இந்த நிலையில், சென்னையில் இருந்து அந்தமான் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கவிருந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமானுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் பரிசோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த மார்சலாம் என்ற நபரது கொரோனா சான்றிதழில் பாசிட்டிவ் என இருந்துள்ளது.

‘சென்னை ஏர்போர்ட்டில்’ சைலண்டாக நின்ற கொரோனா நோயாளி… அதிகாரிகள் அதிர்ச்சி!

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனே அவருக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அப்பகுதி முழுவதையும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னதாகவும் சென்னை விமான நிலையத்தில் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. கடந்த 22ம் தேதி சென்னையிலிருந்து ஐதராபாத் செல்லவிருந்த பயணி ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.